வில் கோலிற்று வான்!

      நூல்: ஐந்திணை எழுபது
கவிஞர்: மூவாதியார்
 திணை: முல்லை

கொன்றைக் குழல் ஊதிக், கோவலர் பின் நிரைத்து,
கன்று அமர் ஆயம் புகுதர, இன்று
வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண,
முழங்கி, வில் கோலிற்று, வான்!
விளக்கம் :
கொன்றைக் குழல் ஊதிக்
கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள் -ன்னு அலைபாயுதே சினிமாப் பாட்டு;
கொன்றை = சிவபெருமானுக்கு உகந்த பூ!
அந்தக் காய்/பழம், நீட்டு நீட்டாத் தொங்கும்! பார்க்கப் புல்லாங்குழல் போல ஒட்டிக்கிட்டு இருக்கும்!
அதான் கொன்றைப் பழம் போல நீளமாப் புல்லாங்குழல் -ன்னு சொல்லுறாரு;
கோவலர் பின் நிரைத்து
குழல் ஊதும் கோவலர்கள்; ஆயர் குலம்!
ஊதிக் கொண்டே, வரிசையில் (நிரை) வர…
கன்று அமர் ஆயம் புகுதர
கன்றுகளைப், பசுக்களோடு புகுமாறு, ஆயர்கள் ஓட்டி வர…
இளங்கன்றுகள் நனையக் கூடாது; மழைக்கு முன்பே, வேகம் கூட்ட…
இன்று வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண
மாலை மழை! பெய்யத் துவங்கிருச்சி!
நான் ஏக்கமாப் பார்க்கின்றேன் (கார்காலத்தில் வருவேன் -ன்னு சொல்லிச் சென்றவன் இன்னும் வரலையே!)
முழங்கி, வில் கோலிற்று, வான்!
திடீர்-ன்னு மேகம் முழங்குது… ஆகா! என் மேலே போரா?
வில்லை வளைத்தது வானம்! = எதிரே காதல் வானவில்!

Leave a comment